உலகம்

ரஷ்யாவில் புதிதாக 1,55,768 பேருக்கு தொற்று: 667 பேர் பலி

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,55,768 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 667 பேர் இறந்துள்ளனர் என்று என அந்நாட்டு கரோனா கண்காணிப்பு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

DIN


மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,55,768 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 667 பேர் இறந்துள்ளனர் என்று  அந்நாட்டு கரோனா கண்காணிப்பு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

ரஷ்யாவில் நேற்றைய தொற்று பாதிப்பு 1,41,883 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,55,768 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,22,84,564 ஆக உயர்ந்துள்ளது. அதே கால இடைவெளியில் 668 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,33,357 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 17,792 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது நேற்றைய தொற்று பாதிப்பைவிட 3.4% அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 15,60,475 ஆகவும், அவர்களில் 2,300 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.

மேலும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து 53,724 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,03,90,732 ஆக அதிகரித்துள்ளது என்று கரோனா கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT