உலகம்

தென் கொரியா 10 லட்சத்தை கடந்த கரோனா தொற்று

DIN

தென் கொரியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 10 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிப்பதாவது:

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,670 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,09,688-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 15 கரோனா நோயாளிகள் அந்த நோய்க்கு பலியானதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 6,873-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 6,54,621 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 3,48,194 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT