ரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 1,71,905 பேருக்கு தொற்று: 609 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,71,905 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 609 பேர் இறந்துள்ளனர் என்று அந்நாட்டு கரோனா கண்காணிப்பு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,71,905 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 609 பேர் இறந்துள்ளனர் என்று அந்நாட்டு கரோனா கண்காணிப்பு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,71,905 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,29,82,023 ஆக உயர்ந்துள்ளது. அதே கால இடைவெளியில் 609 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,36,023 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி
Advertisement
Advertisement
கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 10,843 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது நேற்றைய எண்ணிக்கையை விட 15% குறைந்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 20,21,046 ஆகவும், அவர்களில் 2,300 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து 55,683 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,06,24,954 ஆக அதிகரித்துள்ளது என்று கரோனா கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.