உலகம்

நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பலி: உக்ரைன் தகவல்

பதிலடி தாக்குதலாக ரஷியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

பதிலடி தாக்குதலாக ரஷியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் உக்ரைன் தரப்பில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் கூறியுள்ளது. 

ரஷியா - உக்ரைன் இடையே போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளது.

உக்ரைனில் கீவ் விமான நிலையத்தில் ரஷியா போர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பதிலடி தாக்குதலாக லுஹன்ஸ்க் பகுதியில் ரஷியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ரஷிய ஹெலிகாப்டர் ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அதேநேரத்தில் உக்ரைன் தரப்பில் நூற்றுக்கணக்கில் ராணுவ வீரர்கள் ரஷிய படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT