உலகம்

உக்ரைனிலுள்ள இந்தியர்களுக்கு தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு

DIN

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அறிவிப்பை இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது.

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், தலைநகர் கீவ்வுக்குள் ரஷிய படைகள் புகுந்துள்ளது.

இந்நிலையில், கீவ்வின் இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

வெடிகுண்டு தாக்குதலுக்கான சைரன் ஒலித்தால் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். கீவ் அரசால், மக்கள் பாதுகாப்பாக இருக்க இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT