முகப்பு
உலகம்

‘நாட்டை பாதுகாக்க விரும்புவோருக்கு ஆயுதம் கொடுக்கத் தயார்’: உக்ரைன்

நாட்டை பாதுகாக்க விரும்பும் அனைவருக்கும் ஆயுதம் கொடுக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி  அறிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி
பகிர்:

நாட்டை பாதுகாக்க விரும்பும் அனைவருக்கும் ஆயுதம் கொடுக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி  அறிவித்துள்ளார்.

உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷியாவின் தாக்குதலில் இதுவரை நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், நாட்டை பாதுகாக்க விரும்பும் அனைவருக்கும் ஆயுதம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். உக்ரைன் நகரங்களின் எல்லைகளை பாதுகாக்க தயாராகுங்கள் என அதிபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →