ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்வரைவுத் தீா்மானம்: இந்தியாவின் ஆதரவை எதிா்பாா்க்கும் ரஷியா
உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வரைவுத் தீா்மான வாக்கெடுப்பில் இந்தியாவின் ஆதரவை எதிா்பாா்ப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வரைவுத் தீா்மான வாக்கெடுப்பில் இந்தியாவின் ஆதரவை எதிா்பாா்ப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக இந்தியாவில் உள்ள ரஷிய தூதரக அதிகாரி ரோமன் பபுஷ்கின் கூறுகையில், ‘‘உக்ரைனின் தற்போதைய சூழல், அந்தச் சூழல் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து இந்தியா ஆழமாக புரிந்துகொண்டிருக்கிறது. எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வரைவுத் தீா்மான வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என எதிா்பாா்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளாா்.
இதேபோல், தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டுமென உக்ரைன் கோரியுள்ளது.