உலகம்

மால்டோவா, ஹங்கேரி வழியாக இந்தியர்களை மீட்க நடவடிக்கை

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மால்டோவா, ஹங்கேரி வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

DIN

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மால்டோவா, ஹங்கேரி வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மால்டோவா, ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். 

உக்ரைனில் ரஷியாவின் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைனில் இருந்து ஏராளமான மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் அடைந்து வருகின்றனர். 

உக்ரைனிலுள்ள பலர் போலந்து, மால்டோவா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் சுலோவேக்கியா மற்றும் பெலாரஸில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

உக்ரைனில் இருந்து இதுவரை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நாவின் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக மால்டோவா, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது, இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்குத் தொடர்ந்து உதவ வேண்டும் என்று ஹங்கேரி, மால்டோவா வெளியுறவுத் துறை அமைச்சர்களிடம் அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்தார். 

உக்ரைனிலிருந்து வெளியேறும் இந்தியர்களை மால்டோவாவில் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.  ஏற்கெனவே ஸ்லோவேக்கியா, ருமேனியா ஆகிய நாடுகள் வழியாக இந்தியர்கள் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

SCROLL FOR NEXT