முகப்பு
உலகம்

ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு புதிய உச்சம்

ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று பரவல் விகிதமானது, செவ்வாயன்று, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:00 AM
ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு புதிய உச்சம்
பகிர்:


சிட்னி: ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று பரவல் விகிதமானது, செவ்வாயன்று, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால்  நாடு முழுவதும் மருத்துவமனைகளிலும், கரோனா பரிசோதனை மையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற நகரமான நியூ சௌத் வேல்ஸ் நகரில் ஒரே நாளில் 23,131 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இது புத்தாண்டு நாளில் 22,577 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அங்கு மட்டும் சுமார் 1,344 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  விக்டோரியா மாகாணத்தில் 14,020 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அங்கு மட்டும் 516 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 108 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.