முகப்பு
உலகம்

750 ஜீப்கள்; 500 பேருந்துகள்: இந்தியாவிடமிருந்து வாங்குகிறது இலங்கை

இந்தியாவிடமிருந்து 500 பேருந்துகள், 750 ஜீப்களை வாங்கி இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
பகிர்:

இந்தியாவிடமிருந்து 500 பேருந்துகள், 750 ஜீப்களை வாங்கி இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இலங்கை அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:காவல் துறை வாகனங்களை மேம்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்திடமிருந்து 750 ஜீப்களை வாங்க திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதேபோன்று, 32-35 இருக்கை வசதி கொண்ட 500 பேருந்துகளையும் இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடனுதவி திட்டத்தின் கீழ் இந்தியாவிடமிருந்து இந்த வாகனங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →