முகப்பு
உலகம்

ஒமைக்ரானை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்: உலக சுகாதார நிறுவனம்

ஒமைக்ரானால் பாதிப்பு அதிகம் ஏற்படாது என்றாலும் லேசானதாக இருக்காது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார்.

Updated On : 7 ஜனவரி, 2022 at 8:10 AM
பகிர்:

ஒமைக்ரானால் பாதிப்பு அதிகம் ஏற்படாது என்றாலும் லேசானதாக இருக்காது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டெட்ரோஸ் பேசியதாவது:

கடந்த வாரம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக ஒருநாள் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. டெல்டா வகை கரோனாவைவிட பாதிப்பு குறைவாக இருக்குமே தவிர லேசானதாக இருக்காது.

Advertisement

ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள், அவர்களும் உயிரிழக்கும் சூழல் உள்ளது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வேகமாகவும் அதிகமாகவும் பரவி வருவதால் பெரும் சுகாதார அமைப்பு தேவைப்படுகிறது. இதனால், மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிப்பதுடன் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புடன் பிற நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் அவர்களும் உயிரிழக்க நேரிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.