உலகம்

மனிதருக்கு பன்றியின் இதயத்தைப் பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

DIN


வாஷிங்டன்: மரபணு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை, 57 வயது நோயாளிக்குப் பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

வாஷிங்டனில் அமைந்துள்ள மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்த அறுவை சிகிச்சை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மேரிலேண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டேவிட் பென்னெட் அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள்களுக்குப் பிறகு மெல்ல குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை சுமார் 8 மணி நேரம் நடைபெற்றதாகவும், தற்போது இதயம் சீராக இயங்கி, அறுவை சிகிச்சை செய்து கொண்டவருக்கு ரத்த ஓட்டம் மற்றும் ரத்த அழுத்தம் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, அவர் இதயம் மற்றும் நுரையீரலை இணைக்கும் இயந்திரத்தின் உதவியோடு தான் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயம் முழுமையாக செயல்பட்டு வருகிறது. எந்த நிராகரிப்பும் உருவாகவில்லை. எனவே அந்த இயந்திரத்திலிருந்து அவர் விரைவில் வெளியே வருவார் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மிகவும் எச்சரிக்கையுடன் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளோம், உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு புது வாழ்வு அளிக்கும் வகையிலான சிகிச்சை முறையாக இது உள்ளது. உடலுறுப்பு தானங்கள் மூலம் மிகக் குறைவான உறுப்புகளே கிடைக்கும் நிலையில், இவ்வாறு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உடலுறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் சிகிச்சை முறை வெற்றி பெற்றால், ஏராளமானோருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT