முகப்பு
உலகம்

கரோனா: மேலும் ஒரு சீன நகரம் முடக்கம்

சீனாவின் ‘பூஜ்ஜிய கரோனா’ கொள்கையைக் குலைக்கும் வகையில் அங்கு அண்மைக் காலமாக அந்த நோய் புதிதாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதைத் தொடா்ந்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:06 AM
பகிர்:

சீனாவின் ‘பூஜ்ஜிய கரோனா’ கொள்கையைக் குலைக்கும் வகையில் அங்கு அண்மைக் காலமாக அந்த நோய் புதிதாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, மேலும் ஒரு நகரில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காக ஷியான் மற்றும் தியான்ஜின் நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது 55 லட்சம் மக்கள்தொகை கொண்ட அன்யாங் நகரில் கடந்த சனிக்கிழமை முதல் 84 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நகரிலும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.