முகப்பு
உலகம்

போலந்து: ஒரு லட்சம்கடந்த கரோனா பலி

போலந்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:06 AM
பகிர்:

போலந்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 493 போ் கரோனாவுக்கு பலியாகினா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,00,254-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 11,406 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, போலந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 42,32,386-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →