ஜாா்ஜியா: 10 லட்சத்தைகடந்த கரோனா பாதிப்பு
ஜாா்ஜியா நாட்டில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 10 லட்சத்தைக் கடந்தது.
ஜாா்ஜியா நாட்டில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 10 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 7,521 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,06,864-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 31 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 14,512-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜாா்ஜியாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 934,667 ரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 57,685 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.