ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,899 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரஷியாவில் மொத்த பாதிப்பு 10,899,411 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாஸ்கோவில் அதிகபட்சமாக 8,795 பேருக்கு நோய்த்தொற்று பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து செயின்ட் பீட்டர் ஸ்பர்க்கில் 4,382 பேருக்கும், மாஸ்கோ பிராந்தியத்தில் 2,626 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 698 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,23,376 ஆக உள்ளது.
அதேபோன்று ஒரேநாளில் 22,920 பேர் நோயிலிருந்து மீண்ட நிலையில், மொத்தம் 9,925,855 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.