கோப்புப்படம் 
உலகம்

எத்தனை டோஸ்களை செலுத்திக் கொள்ள வேண்டும்? பதிலளிக்கிறார் ஃபைசர் நிறுவனத்தின் தலைவர்

"கரோனா வைரசுக்கு எதிராக அடிக்கடி பூஸ்டர் தடுப்பூசிகளை போடுவதை ஒப்பிடுகையில் ஆண்டுதோறும் ஒரு கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது சரியானதாக இருக்கும்"

DIN

உலகம் முழுவதும் ஒமைக்ரான் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்டா, ஒமைக்ரான என உருமாறும் தன்மை கொண்ட கரோனா, விஞ்ஞான உலகுக்கே சவால் விடுத்துவருகிறது.

கரோனாவுக்கு முடிவுக்கு கட்டும் விதமாக விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். கரோனா தடுப்பூசிகளை போட்டவர்களுக்கு தீவிர பாதிப்பும் உயிரிழப்புகளும் மிகக் குறைவாக ஏற்படுவது தரவுகளின் மூலம் தெரியவருகிறது. இதனால் உலகின் பல நாடுகளும் தடுப்பூசி பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், ஃபைசர் நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் போர்லா இதுகுறித்து கூறுகையில், "கரோனா வைரசுக்கு எதிராக அடிக்கடி பூஸ்டர் தடுப்பூசிகளை போடுவதை ஒப்பிடுகையில் ஆண்டுதோறும் ஒரு கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது சரியானதாக இருக்கும்" என்றார்.

ஒவ்வொரு நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டுமா? நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், "அது நல்லதொரு செயல்முறையாக இருக்காது. இதற்குப் பதிலாக ஆண்டுதோறும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறப்பானதாக இருக்கும். 

அதற்கேற்ப நாங்கள் தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஆண்டுக்கு ஒரு முறை என்றால் மக்களை எளிதாக ஒப்புக்கொள்ள வைக்கலாம். பொதுச் சுகாதாரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அது தான் சிறந்த சூழ்நிலையாக இருக்கும். ஒமைக்ரான் உள்பட அனைத்து வகையான உருமாறிய கரோனா வகைகளுக்கு எதிராகச் செயல்படும் தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் உள்ளோம்" என்றார்.

மேலும் அவர் பேசுகையில், "ஒமைக்ரானை எதிர்த்துப் போராடக் கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்ட தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பிக்கத் தயாராக உள்ளோம். அதன் உற்பத்தி மார்ச் மாதம் தொடங்கும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலித்த கூலி!

ஓபிஎஸ்ஸை சந்தித்தது உண்மைதான்; அதிமுக பலவீனமாக இருக்கிறது: சசிகலா

இந்தூரில் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர் காயம்!

ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியை எதிர்ப்போம்! கார்கே

ரூ.10,000-க்கு நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்! அறிமுகமானது இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ!

SCROLL FOR NEXT