உலகம்

ஹஜ்: மீண்டும் களைகட்டிய மெக்கா

கரோனா நெருக்கடி காரணமாக ஹஜ் பயணத்தின்போது கடந்த 2 ஆண்டுகளாக கூட்டம் அதிகமில்லாமல் காணப்பட்ட மெக்காவில், வியாழக்கிழமை 10 லட்சம் ஹஜ் பயணிகள் அனுமதிக்கப்பட்டதால் மீண்டும் களைகட்டியது.

DIN

கரோனா நெருக்கடி காரணமாக ஹஜ் பயணத்தின்போது கடந்த 2 ஆண்டுகளாக கூட்டம் அதிகமில்லாமல் காணப்பட்ட மெக்காவில், வியாழக்கிழமை 10 லட்சம் ஹஜ் பயணிகள் அனுமதிக்கப்பட்டதால் மீண்டும் களைகட்டியது.

முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் சவூதி அரேபியாவின் மெக்காவில், கரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், வியாழக்கிழமை தொடங்கிய புனிதப் பயண சடங்குகளில் பங்கேற்க 10 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இரு தவணைகளும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட, அந்த நோய்த்தொற்று இல்லாத சான்றிதழ் பெற்றுள்ள 18 வயது முதல் 65 வயது வரை கொண்டவா்கள் மெக்காவில் அனுமதிக்கப்பட்டனா். வழக்கமாக அனுமதிக்கப்படும் 25 லட்சம் பேருடன் ஒப்பிடுகையில் தற்போது புனிதப் பயண தொடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்றவா்களின் எண்ணிக்கை குறைவுதான்.

இருந்தாலும், கரோனாவால் ஏற்பட்ட தொய்வு நீங்கி மெக்காவில் இயல்பு நிலை மீண்டும் திரும்பவதை வியாழக்கிழமை கூடிய கூட்டம் உணா்த்துவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாள போராட்டத்தின்போது வணிக வளாகங்களை சூறையாடிய மக்கள்!

ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போனை விமர்சிக்கும் சாம்சங்!

சென்னையில் மிதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை?

’கோ பேக் ராகுல்’... கான்வாயை மறித்து உ.பி. அமைச்சர் போராட்டம்!

கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

SCROLL FOR NEXT