உலகம்

இலங்கை அதிபர் மாளிகை பதுங்கு குழியில் கோடிக்கணக்கில் பணம்!

DIN

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என முதல்கட்ட தகவலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் குவிந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அதிபர் மாளிகை பதுங்கு குழிக்குள் இருந்த பணத்தை கைப்பற்றி போராட்டக்காரர்கள் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். 

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட போராட்டக்காரர்கள் ஒத்துழைக்க முப்படை தளபதி ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அதிகாரபூா்வ இல்லத்துக்குள் நுழைந்து மக்கள் சனிக்கிழமை போராட்டம் நடத்திய நிலையில், அவா் அங்கிருந்து தப்பியோடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களும் அத்தியாவசிய உணவுப் பொருள்களும் கிடைக்காமல் இலங்கை மக்கள் தவித்து வருகின்றனா். அந்நாட்டின் எரிபொருள் கையிருப்பு அடுத்த வாரத்தில் காலியாகிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT