போரில் ஈரான் ‘டிரோன்’கள்: அமெரிக்கா எச்சரிக்கை
உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஈரான் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) வழங்கவிருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
உலகம்போரில் ஈரான் ‘டிரோன்’கள்: அமெரிக்கா எச்சரிக்கை
உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஈரான் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) வழங்கவிருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஈரான் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) வழங்கவிருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சுல்லிவன் கூறுகையில், ‘ஆயுதங்களை சுமந்து தாக்குதல் நடத்தக் கூடியவை உள்ளிட்ட நூற்றுக்கண்ககான ஆளில்லா விமானங்களை உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஈரான் வழங்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
கிழக்கு உக்ரைன் நகரங்களை ரஷியா கைப்பற்றும்போது ரஷியா தனது ஆயுதங்களை வெகுவாக இழந்துள்ளது. இதன் காரணமாக, ஈரானிடமிருந்து ஆளில்லா விமானங்களை ரஷியா வாங்கவிருக்கிறது’ என்றாா்.