முகப்பு
உலகம்

மாலத்தீவில் தனியார் ஜெட் விமானம்: தப்புகிறார் கோத்தபய?

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூர் செல்வதற்காக தனியார் விமானம் மாலத்தீவு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
கோத்தபய ராஜபட்ச(கோப்புப்படம்)
பகிர்:

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூர் செல்வதற்காக தனியார் விமானம் மாலத்தீவு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்து ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இந்நிலையில், ரணிலும், அதிபர் கோத்தபயவும் பதவி விலக வேண்டும் என்று கடந்த வாரம் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்தது.

இதனைத் தொடர்ந்து, அதிபர் பதவியை ஜூலை 13ஆம் தேதி ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்த கோத்தபய, நேற்று அதிகாலை அன்டோனோவ்-32 என்ற ராணுவ விமானம் மூலம் தனது மனைவி மற்றும் இரு பாதுகாவலர்களுடன் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.

மாலத்தீவில் கோத்தபய இருப்பதை அறிந்த மக்கள் அதிபர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். கோத்தபயவை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றி இலங்கைக்கே அனுப்புமாறு கோரிக்கை வைத்தனர்.

மக்களின் போராட்டத்தை அடுத்து, சிங்கப்பூர் தப்பிச் சென்றதாகவும், அங்கிருந்து துபை செல்லவுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்களில் நேற்று தகவல்கள் கசிந்தன.

ஆனால், பாதுகாப்பு காரணங்கள் கருதி மலேவிலிருந்து சிங்கப்பூர் கிளம்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோத்தபய செல்லவில்லை எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது கோத்தபய சிங்கப்பூர் செல்வதற்காக மாலத்தீவிற்கு தனியார் ஜெட் விமானம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →