உலகம்

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா: அதிகாரபூர்வ அறிவிப்பு

DIN

இலங்கை அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து கோத்தபய ராஜபட்சவின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக நாடளுமன்ற அவைத் தலைவர்  அறிவிப்பு விடுத்துள்ளார்.

சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபட்ச நேற்று மாலை நாடளுமன்ற அவைத் தலைவருக்கு ராஜிநாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையே, இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபட்ச, அங்கிருந்து விமானம் மூலம் சிங்கப்பூா் சென்றாா். அவா் தனிப்பட்ட முறையில் வந்திருப்பதாகவும், புகலிடம் எதுவும் அளிக்கவில்லை எனவும் சிங்கப்பூா் அரசு தெரிவித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அதிபா் பதவியில் இருந்து ஜூலை 13-ஆம் தேதி விலக உள்ளதாக கோத்தபய ராஜபட்ச அறிவித்திருந்தாா். ஆனால், பதவியை ராஜிநாமா செய்வது தொடா்பாக எதுவும் தெரிவிக்காத அவா், விமானப் படை விமானம் மூலம் மனைவியுடன் மாலத்தீவுக்கு புதன்கிழமை தப்பிச் சென்றாா். அங்கிருந்து, நாட்டின் இடைக்கால அதிபராக பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை அவா் நியமித்தாா்.

அதிபராக இருக்கும்போது அவரைக் கைது செய்ய முடியாது என்பதால், அப்பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பே வெளிநாட்டுக்கு அவா் தப்பியதாகக் கூறப்படுகிறது.

நாளை இலங்கை நாடளுமன்றம் கூடுகிறது. ஒரு வாரத்தில் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT