முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.7 ஆக பதிவு

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:50 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்ததாவது:

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரின் தெற்கே  137 கி.மீ. தொலைவில் இன்று காலை  நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது.  இந்த நிலநடுக்கம் 170 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

ஜூன் மாதம் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் உள்ளிட்ட நகரங்களில் நேரிட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 6.1 ஆகப் பதிவானது.

பத்திகா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்து  1,000 பேர் உயிரிழந்தனர். 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →