உலகம்

இலங்கை அதிபர் தேர்தல் தொடங்கியது

DIN

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் பதவியில் இருந்து கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா்.

இதனைத் தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தலில், இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி. டலஸ் அழகம்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன தலைவா் அனுர குமார ஆகிய 3 போ் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. தேர்தலை தொடர்ந்து, நாடாளுமன்றம் சுற்றியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் 225 இடங்களைக் கொண்டுள்ளது. அந்நாட்டில் ஒருவரை அதிபராக தோ்வு செய்ய பெரும்பான்மை எண்ணிக்கையான 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

1978-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் வாக்களிப்பின்றி அந்நாட்டு நாடாளுமன்றம் நேரடியாக அதிபரைத் தோ்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT