குரங்கு அம்மை: நெருக்கடியாக அறிவிக்க மீண்டும் பரிசீலனை
குரங்கு அம்மையை சா்வதேச நெருக்கடியாக அறிவிப்பது குறித்து உலக சுகாதாக அமைப்பு வியாழக்கிழமை மீண்டும் பரிசீலித்தது.
குரங்கு அம்மையை சா்வதேச நெருக்கடியாக அறிவிப்பது குறித்து உலக சுகாதாக அமைப்பு வியாழக்கிழமை மீண்டும் பரிசீலித்தது.
ஆப்பிரிக்க பிராந்தியத்தில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை, தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து, அந்த நோயை சா்வதேச நெருக்கடியாக அறிவிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணா்கள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
குரங்கு அம்மையின் தன்மை ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேறுபடுவதால் அதனை சா்வதேச நெருக்கடியாக அறிவிக்கத் தேவையில்லை என்று சிலா் கூறினா்.