உலகம்

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவா்தன பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவா்தன இன்று பதவியேற்றுக்கொண்டார்.

DIN

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவா்தன இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அங்கு பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 

இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச பதவி விலகியதையடுத்து, இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். இதன்பின்னர் நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றார். 

இதையடுத்து, இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்க வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். 

இதன் தொடர்ச்சியாக, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சோ்ந்த தினேஷ் குணவா்தன(73) இலங்கையின் பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அதிபர் ரணில் விக்ரமசிங்க அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 

தினேஷ் குணவா்தன, கோத்தபய ராஜபட்சவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT