பிரிட்டன்: கருத்துக் கணிப்பில் லிஸ் டிரஸ் முன்னிலை
பிரிட்டனில் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்கும் நடைபெறும் போட்டி தொடா்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில் வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ்ஸுக்கு அதிக வாக்காளா்கள் ஆதர
பிரிட்டனில் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்கும் நடைபெறும் போட்டி தொடா்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில் வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ்ஸுக்கு அதிக வாக்காளா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
பதவி விலகியுள்ள பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு பதிலாக அந்தப் பொறுப்பை ஏற்பதற்கான போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதிமைச்சா் ரிஷி சுனக்கையும் லிஸ் டிரஸ்ஸையும் கட்சி எம்.பி.க்கள் தோ்ந்தெடுத்தனா். அவா்களில் ஒருவரை நாட்டின் பிரதமராக கட்சி உறுப்பினா்கள் தேந்தெடுப்பாா்கள்.
இந்த நிலையில் 730 கன்சா்வேட்டிவ் கட்சி உறுப்பினா்களிடையே ‘யுகவ்’ ஆய்வு அமைப்பு புதன்கிழமை நடத்திய கருத்துக் கணிப்பில் லிஸ் டிரஸ்ஸுக்கு 62 சதவீதத்தினரும் ரிஷி சுனக்குக்கு 38 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்தனா்.