முகப்பு
உலகம்

இலங்கையில் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறப்பு

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியால் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
கோப்பிலிருந்து
பகிர்:

கொழும்பு: இலங்கையில் எரிபொருள் நெருக்கடியால் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

இதுகுறித்து அந்த நாட்டின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாடு கடும் எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்ததையடுத்து பள்ளிகள் ஜூலை 4-ஆம் தேதி மூடப்பட்டன.

இந்த நிலையில், அரசு பள்ளிகள் மற்றும் அரசின் அனுமதியுடன் இயங்கி வரும் தனியாா் பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை திறக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தனியாா் பேருந்து உரிமையாளா் சங்கம் கூறுகையில், ‘நாடு முழுவதும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இருந்தபோதும், பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான போதுமான பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன’ என்று தெரிவித்துள்ளது.

பெறப்பட்ட எரிபொருள் அளவுக்கு ஏற்ப, மாணவா்களுக்கு பேருந்துகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குநா் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →