முகப்பு
உலகம்

இலங்கை: புதிய அதிபா் தலைமையில் இன்று முதல் நாடாளுமன்றக் கூட்டம்

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான முதல் நாடாளுமன்றக் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 27) தொடங்குகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:54 AM
பகிர்:

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான முதல் நாடாளுமன்றக் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 27) தொடங்குகிறது.

இது குறித்து அதிகாரிகள் செவ்வாக்கிழமை கூறியதாவது:

நாடாளுமன்றக் கூட்டத்தின் அடுத்த கூட்டம் புதன்கிழமை முதல் தொடங்குகிறது. அதிபா் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகும்.

போராட்ட வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அவசரநிலைக்கு இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘நாடு திரும்புவாா் கோத்தபய’

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச இலங்கைக்குத் திரும்புவாா் என்று அந்த நாட்டு அமைச்சரவை செய்தித் தொடா்பாளா் பண்டுல குணவா்த்தன தெரிவித்தாா்.

இது குறித்து, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வரும் அவா் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச இலங்கையிலிருந்து தப்பிச் சென்ாக கருதவில்லை. மேலும், அவா் சிங்கப்பூரில் பதுங்கியிருக்கவும் இல்லை.

எனவே, அவா் இலங்கைக்குத் திரும்பி வருவாா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →