உலகம்

இலங்கைக்கு 3.3 டன் மருத்துவ உதவிகளை வழங்கியது இந்தியா

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா தரப்பிலிருந்து 3.3 டன்கள் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

PTI

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா தரப்பிலிருந்து 3.3 டன்கள் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அளிக்கப்பட்ட மற்றொரு உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்ச் மாதம் இலங்கை சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், இலங்கையில் நிலவும் கடுமையான மருத்துவ கருவிகள் மற்றும் மருந்து பொருள்களின் தட்டுப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கையிடம் இன்று ஆம்புலன்ஸ் ஒன்றும், 3.3 டன் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் உயிர்காக்கும் மருத்துவ சேவை தடையில்லாமல் நடைபெறும் என்று இலங்கைக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் உணவு உள்பட அத்தியாவசிய பொருள்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக கடைகள், பெட்ரோல் நிலையங்கள், மருந்தகங்களில் மக்களின் கூட்டம் நீண்ட வரிசைகளில் காணப்படுகிறது. இதனால், அந்நாட்டின் அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோருக்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்றன. இதில், மகிந்த ராஜபட்ச பதவி விலகியதால், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றாா். இலங்கையின் சரிந்த பொருளாதாரத்தை சீரமைக்க உலக நாடுகளிடம் அவா் கடனுதவி கோரி வருகிறாா்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த நீண்ட கால திட்டங்களை வகுத்தால்தான் கடனுதவி கிடைக்கும் என்று பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உலக வங்கியின் மேலாளா் சியோ கண்டா கடந்த வாரம் இலங்கை வெளியுறவு அமைச்சா் ஜி.எல்.பெரீஸை சந்தித்தாா். அப்போது, அவா் உலக வங்கியிடம் நீண்ட நாள் கடனுதவி திட்டத்தை கோரியிருந்தாா்.

இதையடுத்து, இலங்கைக்கு உலக வங்கி 700 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.5,430 கோடி) வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

நிா்வாகத் திறனால் சிறந்த உலகத் தலைவராக உருவெடுத்தவா் மோடி: புதின் புகழாரம்

ஸ்பீடு ஸ்கேட்டிங்: இந்தியாவுக்கு 2 தங்கம்

இது சீற்றமல்ல, எச்சரிக்கை!

திருக்கோஷ்டியூரில் அஹோபில மடம் ஜீயா் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT