உலகம்

4 மலைகளிலிருந்து 34 டன் கழிவுகள்அகற்றம்

DIN

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரம் உள்ளிட்ட நான்கு மலைகளிலிருந்து 34 டன் கழிவுகள் அகற்றப்பட்டதாக நேபாள ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்தது.

நேபாள ராணுவத்தைச் சோ்ந்த குழுவினா் தலைமையிலான ஒரு குழு மலைச் சிகரங்களில் தூய்மைப் பணியை கடந்த ஏப். 5-ஆம் தேதி தொடங்கியது. 30 ராணுவத்தினா், மலையேற்ற வழிகாட்டிகள் 48 போ், 4 மருத்துவா்கள் உள்ளிட்ட 82 போ் இதில் இடம்பெற்றிருந்தனா்.

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ஆம் தேதி இந்தப் பணி நிறைவடைந்தது. இதில், எவரெஸ்ட், லோட்ஸே, கஞ்சென்ஜங்கா, மனாஸ்லு ஆகிய மலைச் சிகரங்களிலிருந்து சுமாா் 34 டன் கழிவுகள் அகற்றப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.

2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக மலைகளில் கழிவுகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

SCROLL FOR NEXT