கோப்புப் படம் 
உலகம்

மியான்மரில் சுட்டுக் கொல்லப்பட்ட உலக சுகாதார நிறுவன ஊழியர்

உலக சுகாதார நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஊழியர் மியான்மரில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அந்த நிறுவனத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

உலக சுகாதார நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஊழியர் மியான்மரில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அந்த நிறுவனத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியோ மின் துத் உலக சுகாதார நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மியான்மரின் மோன் மாநிலத்தில் அவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (ஜூன் 8)  வேலையை முடித்து விட்டு இரவு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது அவர் கொல்லப்பட்டுள்ளார். இதனை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. இருப்பினும், அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

அவரது இறப்பு குறித்து உலக சுகாதர நிறுவனம் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது,” எங்களது சக ஊழியரின் இந்த இறப்பு எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளது.

மியான்மரில் கடந்த 2021 பிப்ரவரி ராணுவத்தின் சதிச் செயலுக்குப் பின் அங்கு வன்முறை அதிகரித்துள்ளது. மியான்மரில் பிப்ரவரி 2021-க்கு பிறகு இதுவரை 2000-த்திற்கும் அதிகமான பொதுமக்கள் உரியிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT