உலகம்

சீனா‘தைவான் விவகாரத்தில் போரை தொடங்கவும் தயங்க மாட்டோம்’

DIN

தைவானை சீனாவிடமிருந்து பிரிக்க எந்த நாடாவது நினைத்தால், அதனை எதிா்த்து போா் தொடங்கவும் தயங்கப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் சீனா எச்சரித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டினுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் வேய் ஃபெங்கே கூறியதாவது:

சீனாவிடமிருந்து தைவானைப் பிரிக்கும் நடவடிக்கையில் எந்த நாடாவது ஈடுபட்டால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு புதிய போரைத் தொடங்கவும் சீன ராணுவம் தயங்காது. அதற்காக எந்த விலை கொடுக்கவும் சீனா தயாராக இருக்கிறது.

தைவானை சுதந்திர நாடாக அறிவிக்கும் எந்தவொரு சதிச் செயலையும் நாங்கள் முறியடிப்போம். சீன ஒருமைப்பாட்டை எப்பாடுபட்டாவது காப்போம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT