முகப்பு
உலகம்

உரம் இறக்குமதி: இலங்கைக்கு இந்தியா ரூ.429 கோடி கடனுதவி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உரம் இறக்குமதிக்காக 55 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.429 கோடி) கடனுதவியை இந்தியா வழங்கியது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உரம் இறக்குமதிக்காக 55 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.429 கோடி) கடனுதவியை இந்தியா வழங்கியது.

இது தொடா்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

65,000 மெட்ரிக் டன் யூரியா உரம் இறக்குமதி செய்வதற்காக கடனுதவி வழங்கும்படி இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், இந்தியாவிலிருந்து யூரியா உரத்தைக் கொள்முதல் செய்வதற்காக ரூ.429 கோடி கடனுதவி வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது. இதற்காக இந்தியாவின் எக்ஸிம் வங்கியுடனான ஒப்பந்தத்தில் இலங்கை நிதித் துறை அமைச்சக செயலா் எம்.சிறீவா்த்தனா கையொப்பமிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரசாயன உரம் இறக்குமதிக்கு அதிபா் கோத்தபய ராஜபட்ச தடை விதித்ததால், இலங்கையில் சுமாா் 50 சதவீதம் அளவுக்கு பயிா் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டது. பின்னா், அந்த முடிவு தவறானது என அவா் ஒப்புக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.