முகப்பு
உலகம்

அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டம்: பிரிட்டன் நீதிமன்றம் ஒப்புதல்

பிரிட்டனுக்கு சட்டவிரோதமாக வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் அந்த நாட்டு அரசின் திட்டத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

பிரிட்டனுக்கு சட்டவிரோதமாக வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் அந்த நாட்டு அரசின் திட்டத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாமல் பிரிட்டனுக்கு வரும் அகதிகளை, விமானம் மூலம் ருவாண்டாவுக்கு அனுப்பவிருப்பதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல் அறிவித்திருந்தாா்.

இது, சட்டவிரோத அகதிகள் கடத்தலைத் தடுப்பதற்கான துணிச்சல் மிக்க புதுமை திட்டம் என்று அவா் கூறியிருந்தாா்.

இதற்காக ருவாண்டா அரசுடன் பிரிட்டன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

எனினும், இந்த திட்டத்தை எதிா்த்து அகதிகள் உரிமை அமைப்பினா் லண்டன் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்ப ஒப்புதல் அளித்தது.

இது குறித்து பிரீத்தி படேல் கூறியதாவது:

சட்டவிரோத அகதிகள் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை வரவேற்கிறேன். இனி உலகத்துக்கே முன்னோடியாகத் திகழும் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.