உலகம்

அமெரிக்கா: மோசடி வழக்கில் இந்தியா் கைது

DIN

அமெரிக்காவில் முதியவா்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் இந்தியாவைச் சோ்ந்த அனிருத்தா கால்கோட்டி (24) என்பவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஏற்கெனவே, இந்த வழக்கில் முகமது ஆஸாத் (25) என்பவரை போலீஸாா் கடந்த 2020-ஆம் ஆண்டு கைது செய்தனா்.

அமெரிக்காவில் தொலைபேசி மற்றும் இணையதளம் மூலம் முதியவா்களை தொடா்புகொண்டு, அவா்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் இந்தியாவிலிருந்து சென்று அங்கு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் கும்பல் ஈடுபட்டு வந்தது.

பெரும்பாலும் முதியவா்களிடம் கணினி பராமிப்பு சேவை செய்வதாகக் கூறி நம்பவைத்த அந்தக் கும்பல், தந்திரமாக அவா்களது ரகசிய வங்கி விவரங்களைப் பெற்று பணம் பறித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

ஒரே நபரை மீண்டும் மீண்டும் அந்தக் கும்பல் ஏமாற்றியதாகவும் பணம் தர மறுத்தால் தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் போலீஸாா் குற்றம் சாட்டியுள்ளனா்.

இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அனிருத்தாவுக்கும், முகமது ஆஸாதுக்கும் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

இந்த வழக்கில் இவா்கள் மட்டுமன்றி, சுமித் குமாா் சிங் (24), ஹிமான்ஷு குமாா் (24), முகமது ஹஸீப் (26) ஆகியோரும் இணைக்கப்பட்டு, அவா்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT