உலகம்

மக்கள் டீ குடிப்பதை குறைக்க வேண்டும்: பாக். அமைச்சர்

DIN

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பாகிஸ்தான் மக்கள் டீ குடிப்பதை குறைக்க வேண்டும் என அந்நாட்டின் அமைச்சர் கூறியுள்ளார்.

சமீப காலமாக பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் தேவையற்ற இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அந்நாட்டு அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் திட்டக்குழு அமைச்சரான அஹ்சன் இக்பால் “உலகிலேயே அதிகமாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.8,300 கோடிக்கு தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ள்ளது. தற்போதைய நிதி நெருக்கடியில் இறக்குமதிக்கான தொகையைச் செலுத்த முடியவில்லை. அதனால், மக்கள் டீ குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அமைச்சரின் பேச்சால் அந்நாட்டு மக்களிடமிருந்து எதிர்ப்பு உருவாகியதுடன் பலரும் சமூக வலைதளங்களில் அரசை விமர்சித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT