உலகம்

இந்தியாவிடமிருந்து 50,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி: இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க

இந்தியாவிடமிருந்து கடனுதவி திட்டத்தின்கீழ் 50,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்திருப்பதாக இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.

DIN

இந்தியாவிடமிருந்து கடனுதவி திட்டத்தின்கீழ் 50,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்திருப்பதாக இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.

அரிசி பற்றாக்குறையைப் போக்கவும், விலைவாசி உயா்வைத் தவிா்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் ரசாயன உர பயன்பாட்டுக்கு அதிபா் கோத்தபய ராஜபட்ச தடை விதித்ததால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதற்கு முன்பாக அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு பெற்றிருந்தது.

இலங்கைக்கு 25 டன் மருந்து, 9,000 டன் அரிசி, 50 டன் பால் மாவு, 3,500 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) உள்ளிட்ட பொருள்களை இந்தியா அண்மையில் அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT