உலகம்

வெப்ப அலை: திறந்தவெளி நிகழ்ச்சிகளுக்கு பிரான்ஸ் தடை

 ஐரோப்பா முழுவதும் இதுவரை காணாத வெப்ப அலை வீசி வரும் சூழலில், திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.

DIN

 ஐரோப்பா முழுவதும் இதுவரை காணாத வெப்ப அலை வீசி வரும் சூழலில், திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பாா்டோ நகரைச் சுற்றிலும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் பெரும் திரளாக கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், திருமணம் போன்ற தனியாா் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு.

வியாழக்கிழமை மட்டும் பிரான்ஸின் சில பகுதிகளில் முந்தைய ஆண்டைவிட 40 டிகிரி அதிக வெயில் இருந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புவி வெப்பமயமாதலின் விளைவாக, அண்மைக் காலங்களில் கடுமையான வெப்ப அலைகள் அடிக்கடியும், மிக நீண்ட காலத்துக்கும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இந்த வெப்ப அலையால் ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முக்கிய மசோதாக்களை கூட்டத்தொடரின் கடைசி நாள்களில் தாக்கல் செய்யலாமா? -கனிமொழி எம்.பி. கண்டனம்!

வெட்கச் சிரிப்பில்.... அனுமோள்!

அக்னி - 5 ஏவுகணைச் சோதனை வெற்றி!

வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போருக்கு... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!

ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

SCROLL FOR NEXT