உலகம்

டிவிட்டரை எலான் மஸ்குக்கு விற்க இயக்குநா்கள் ஒப்புதல்

DIN

ட்விட்டரை டெல்ஸா அமைப்பின் தலைமை செயலதிகாரி எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) கையகப்படுத்துவதற்கு அந்த ஊடக நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக, ட்விட்டா் பணியாளா்களுடன் காணொலி மூலம் கடந்த வாரம் பேசிய எலான் மஸ்க், ட்விட்டரைக் கையகப்படுத்தும் எண்ணத்தைக் கைவிடவில்லை எனவும், அதற்குத் தடையாக பல பிரச்னைகள் இருப்பதாகவும் கூறினாா்.

அந்தப் பிரச்னைகளில் ஒன்றாக, தனது கையகப்படுத்தல் திட்டத்துக்கு ட்விட்டா் நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் அளிக்காததையும் மஸ்க் குறிப்பிட்டாா். இந்தச் சூழலில், இயக்குநா் குழு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT