கருக்கலைப்பு 
உலகம்

பிரிட்டனில் அதிர்ச்சித் தகவல்: ஒரே ஆண்டில் அதிகரித்த கருக்கலைப்பு

பிரிட்டன் மற்றும் வேல்ஸில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு கருக்கலைப்புகள் உயர்ந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளன. 

DIN

பிரிட்டன் மற்றும் வேல்ஸில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு கருக்கலைப்புகள் உயர்ந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளன. 

2021-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,15,000 பேர் கருக்கலைப்புகள் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதார மேம்பாட்டுத் துறை அலுவலகத்தின் அறிக்கையின்படி, 

சுகாதார தரவுகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலேயே கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கரோனா பெருந்தொற்று காலத்தில், அஞ்சல் மூலம் மாத்திரை பெரும் திட்டம் மிகவும் பிரபலமாக இருந்ததால், மருத்துவர்களை நேரில் சந்திக்க இயலாத பல பெண்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்தியாக கூறப்படுகிறது. 

சுகாதார அமைச்சர்கள் இந்த திட்டத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும், இதனால் எந்தவித பலனும் ஏற்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது. 

பிரிட்டிஷ் கர்ப்ப ஆலோசனை சேவையின் தலைவரான கிளேர் மர்பி, கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட கருக்கலைப்பு எண்ணிக்கையில் இந்த கொள்கை திட்டத்துக்குப் பங்கு இருந்திருக்கலாம் என்று பரிந்துரைத்தார். 

கரோனா தொற்றுநோய் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் வகையில் அரசு ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், பெண்களின் கர்ப்பத் தேர்வுகளில் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT