உலகம்

உக்ரைனின் கெர்சன் நகருக்குள் நுழைந்தது ரஷிய ராணுவம்

உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் நுழைந்தது ரஷிய ராணுவம். 

DIN

உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் நுழைந்தது ரஷிய ராணுவம். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய படைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. 

ஏற்கெனவே தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகருக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் ரஷிய ராணுவம் நுழைந்துள்ளது. 

கார்கிவ் மற்றும் கெர்சன் பகுதிகளில் உள்ள அரசுக் கட்டடங்களை குறிவைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவிற்கு அருகில், அதன் புறநகரில் ரஷியா சோதனைச் சாவடிகளை அமைத்து வருவதாக கிரிமியா நகர மேயர் தகவல் தெரிவித்துள்ளார். 

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷிய ராணுவம் இன்று ஆக்ரோஷ தாக்குதலை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT