உலகம்

உக்ரைன் போர்: பொதுமக்களில் 352 பேரும் 14 குழந்தைகளும் பலி

DIN

உக்ரைனில் போர்ச்சூழல் மோசமடைந்து வரும் நிலையில், இதுவரை ரஷிய ராணுவப் படையினரின் தாக்குதலுக்கு பொதுமக்களில் 352 பேரும், 14 குழந்தைகளும் பலியாகியுள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. 

தலைநகரான கீவ், கார்கீவ் ஆகிய நகரங்களில் பெரும்பாலான இடங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதோடு மட்டுமல்லாமல் கீவ் நகரில் 64 கிலோமீட்டர் தொலைவுக்கு ராணுவ வாகனங்கள் அணிவகுத்துள்ளன. 

இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சொந்த நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. 

பெலாரஸ் நாட்டின் கோமல் பகுதியில் ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாததால், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தப் பேச்சுவாத்தை போலந்து - பெலாரஸ் எல்லையில் நடைபெறவுள்ளது. 

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை வீட்டோ கொண்டு ரஷியா முறியடித்தது. 

இந்நிலையில் ரஷியா - உக்ரைன் போர் தொடர்பாக விவாதிக்க ஐநா அவையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. எனினும் ரஷிய ராணுவம் போரை நிறுத்தாமல், மேலும் அதனைத் தீவிரப்படுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

SCROLL FOR NEXT