ஜோ பைடன் (கோப்புப் படம்) 
உலகம்

அமெரிக்க வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்கத் தடை: ஜோ பைடன்

அமெரிக்க வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை அறிவித்துள்ளார். 

DIN

அமெரிக்க வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை அறிவித்துள்ளார். 

கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறப்பதற்குத் தடைவிதித்துள்ள நிலையில், அமெரிக்காவும் தற்போது தடை விதித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.  அப்போது உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். 

ரஷியாவின் தாக்குதலுக்கு எதிரான உக்ரைன் தைரியத்துடன் போரிட்டு வருகிறது. புதின் அடுத்தடுத்த போர்களின் மூலம் லாபங்களைப் பெறலாம். ஆனால் எதிர்காலத்தில் இதற்கெல்லாம் அவர் அதிக விலைகொடுக்க வேண்டிவரும். உக்ரைன் நாட்டு மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது என்று கூறினார்.

மேலும், உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளுடன் அமெரிக்கப் படைகள் மோதாது என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்க வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

பிரிட்டன் அரசும் இதே நிலைப்பாட்டை எடுத்த நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய பைடனும் ரஷியாவிற்கு எதிரான வான்வழிப்போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது.

ரஷியா செய்து வரும் குற்றங்களைக் கண்டறிய உக்ரைனுக்கு சிறப்புக் குழு அனுப்பப்படும் என்றும் பைடன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT