ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ 
உலகம்

மூன்றாம் உலகப் போர் பெரும் அழிவை ஏற்படுத்தும்: ரஷிய வெளியுறவு அமைச்சர்

மூன்றாம் உலகப் போர் பெரும் அழிவை ஏற்படுத்தும் என ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DIN

மூன்றாம் உலகப் போர் பெரும் அழிவை ஏற்படுத்தும் என ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ  புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி ரஷியப் படைகள் முன்னேறி வருகிறது. குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள் என அரசின் கட்டடங்களை ஏவுகணை மூலம் தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் இன்று ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

ரஷியாவுடனான பேச்சுவார்த்தையை உக்ரைன் தள்ளிப் போடுவதற்கு அமெரிக்காதான் காரணம். ரஷிய தனிமைப்படவில்லை. பல்வேறு நாடுகள் நண்பர்களாக இருகின்றனர்.

மூன்றாம் உலகப் போர் வந்தால் அணுசக்தியானது பெரும் அழிவை ஏற்படுத்தும் என்றார்.

கடந்த திங்கள்கிழமை ரஷியா - உக்ரைன் இடையே முதல்கட்ட பேச்சு நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷிய அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT