பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 56ஆக உயர்வு
பெஷாவரில் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.
உலகம்பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 56ஆக உயர்வு
பெஷாவரில் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.
பெஷாவரில் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மேற்கே 190 கீமி தொலைவில் அமைந்துள்ளது பெஷாவர் நகரம். கொச்சா ரிசல்டார் என்ற பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பாக சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 30 பேர் பலியானார்கள். 56 பேர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது சம்பவ இடம் அருகே இருந்த ஜாஹீத் கான் இதுகுறித்து கூறுகையில், "ஒரு நபர் மசூதிக்குள் நுழைவதற்கு முன்பு இரண்டு போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை நான் பார்த்தேன். சில வினாடிகளுக்குப் பிறகு ஒரு பெரிய வெடிச்சத்தத்தைக் கேட்டேன்" என்றார். தற்போது இந்த குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது. 194 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனிடையே பெஷாவர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.