உலகம்

உக்ரைன் போரில் ரஷிய தளபதி பலி

உக்ரைன் போரில் ரஷிய தளபதி பலியானதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

உக்ரைன் போரில் ரஷிய தளபதி பலியானதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா 9-வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியுள்ள ரஷியப் படை, இன்று உக்ரைனில் உள்ள சபரோஸ்ஸியா அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதுடன் தொடர்ந்து உக்ரைனின் முக்கியப் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியுடன் இயங்கி வருகிறது.

குறிப்பாக கெர்சன் மற்றும் எனர்கோடர் நகரங்களைக் கைப்பற்றிய ரஷிய ராணுவம் தற்போது மிக்கலேவ் நகரையும் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், செர்னிகிவ் பகுதியில் உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் ரஷிய ராணுவத்தின் 41-வது படைத் தளபதி ஜெனரல் ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கி பலியானதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைனில் ரஷியாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT