உலகம்

வீட்டிலிருந்தே வேலைக்கு முற்றுப்புள்ளி: ஏப். 11 முதல் அலுவலகம் திரும்பும் ஆப்பிள் ஊழியர்கள்

IANS


சான் பிரான்சிஸ்கோ: தகவல்தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவானாகத் திகழும் ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர்கள், வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் அலுவலகத்துக்குத் திரும்பவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிஎன்பிசி வெளியிட்டிருக்கும் செய்தியில், கரோனா பேரிடர் காரணமாக, ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வரும் நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல நாடுகளில் கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில், அலுவலகங்கள் திறக்கப்பட்டு, ஊழியர்கள் பணிக்குத் திரும்பும் சுமூகமான நிலை உருவாகியுள்ளது.

முன்னதாக, கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் அலுவலகம் திரும்ப அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கரோனா பேரிடர் காலத்தில், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கூறிய மிகப்பெரிய முன்னணி முதல் நிறுவனமாக ஆப்பிள் இருந்தது. அது கடந்த 2020 மார்ச் மாதத்திலேயே தங்களது ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT