உலகம்

உக்ரைனிலிருந்து வெளியேறிய 20 லட்சம் மக்கள்: ஐநா தகவல்

DIN

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு தொடங்கியிதிலிருந்து இதுவரை 20 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது. இரண்டாம் உலக போருக்கு பிறகு இம்மாதிரியான நெருக்கடி நிகழ்ந்ததே இல்லை என்றும் ஐநா தெரிவித்துள்ளது.

பெரும்பாலான உக்ரேனிய மக்கள், போலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக வியூக தகவல் தொடர்பு மையம் வியாழக்கிழமையன்று தெரிவித்துள்ளது.

உக்ரேனிய மக்கள் தஞ்சமடைந்துள்ள நாடுகளின் விவரம்:

போலாந்து: 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்
ஹங்கேரி: 1 லட்சத்து 91 ஆயிரம் மக்கள்
ஸ்லோவாகியா: 1 லட்சத்து 40 ஆயிரம் மக்கள்
ரஷியா: 9,900 மக்கள்
மால்டோவா: 82,000 மக்கள்

மார்ச் 7ஆம் தேதி மட்டும், 17 லட்சம் உக்ரேனியர்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். வெளியேறிய 20 லட்சம் பேரில் 50 சதவகிதத்திற்கு மேற்பட்டோர் குழுந்தைகள் என ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டாம் உலக போருக்கு பிறகு முதல்முறையாக மக்கள் அகிதகளாக மாறுவது நெருக்கடியாக மாறியுள்ளது என்றும் ஐநா குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT