உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 250 பேர் வெளியேற்றம்

இந்தோனேசியாவின் மௌண்ட் மெராபி எரிமலை வியாழன் இரவு வெடித்துச் சிதறியது. இதனால், சுமார் 250 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

DIN

இந்தோனேசியாவின் மௌண்ட் மெராபி எரிமலை வியாழன் இரவு வெடித்துச் சிதறியது. இதனால், சுமார் 250 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள எரிமலையானது நள்ளிரவுக்கு முன்னும் பின்னும் எனக் குறைந்தது 7 முறை வெடித்துச் சிதறியது. 

எரிமலையிலிருந்து வெளியேறிய வெப்பமானது சுமார் 5 கி.மீ வரை பரவியதாகத் தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முராரி தெரிவித்தார். 

எரிமலை வெடிப்பு சத்தம் பல கிலோமீட்டர்கள் (மைல்) தொலைவில் கேட்டதாக அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். 

யோக்யகர்த்தா சிறப்பு மாகாணத்தில் உள்ள கிளாகஹார்ஜோ மற்றும் உம்புல்ஹார்ஜோ கிராமங்களிலும், மத்திய ஜாவாவின் கிளாட்டன் மாவட்டத்திலும் 253 பேர் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டனர். 

இச்சம்பவத்தில் அப்பகுதியில் இதுவரை எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT